முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      தமிழகம்
EVKS 2023 02 03

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தோ்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தோ்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறாா். 

அவருக்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தி.மு.க.வினா் தீவிர தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அமைச்சா்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, வி.செந்தில்பாலாஜி, ஆா்.எஸ். ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோா் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனா். 

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது தோ்தல் பிரசாரத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கினார். அதை தொடர்ந்து நேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,  ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாக்கல் செய்தார்.

பின்னர் நிருபர்களீடம் பேசிய இளங்கோவன்,  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை காட்டிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன். 

எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈரோட்டுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிகப் பெரும் வெற்றியை பெறுவோம் என்று இளங்கோவன் கூறினார். 

அதை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சி செய்து வருகிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், அண்ணாமலையை பொறுத்தவரை என்னை விட அவர் பெரிய மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து