Idhayam Matrimony

இஸ்ரேல் படையினரை தாக்க முயன்ற பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      உலகம்
Gun 2023 01 05

இஸ்ரேலுக்கும் , பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதி இஸ்ரேல் படை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று முன்தினம் இஸ்ரேல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது ஒரு வாலிபர் அவர்களை கத்தியால் தாக்க முயன்றான். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். விசாரணையில் அவனது பெயர் யாசன் கசீப் ( 23) என்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து