முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்: நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டார்

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      இந்தியா
Modi 2023 03 18

டெல்லியில் சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அஞ்சல் தலை ஒன்றையும், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ற்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார். 

இதன் பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டில் இந்தியா முன்னிலை வகிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு போன்ற நிகழ்வுகள், சர்வதேச நலன்களுக்கு தேவையானது மட்டுமின்றி உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் அதிகரித்து வரும் பொறுப்புணர்வுக்கான அடையாளமும் ஆகும். 

இந்தியாவின் முன்மொழிவுகள் மற்றும் முயற்சிகளுக்கு பின்னர், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. அமைப்பு அறிவித்து இருப்பது என்பது நமக்கு கிடைத்த மிக பெரிய கவுரவத்திற்கு உரிய விஷயம். 

இந்தியாவின் சிறுதானிய இயக்கம், 2.5 கோடி விளிம்பு நிலையிலான விவசாயிகளுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களாக அமையும். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுதானிய விவசாயிகளுக்கு முதன்முறையாக அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர்  மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து