முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : நீரில் மூழ்கி  உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், வாராப்பூர் உள்வட்டம், உலகம்பட்டி குரூப் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று முன்தினம் (18-ம் தேதி) அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி த/பெ. நாகராஜ் (10), மகேந்திரன் த/பெ. (லேட்) லெட்சுமணன் (07), மற்றும் சந்தோஷ்  த/பெ. (லேட்) லெட்சுமணன் (05) ஆகிய மூன்று சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் த/பெ.மகேந்திரன் (16)  என்பவர் அதே தெருவின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற துயரச் செய்தினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து