முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Budget-10 2023 03 20

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி" என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

  • ரூ..410 கோடி செலவில் கோவை, விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிய சிப்காட் அமைக்கப்படும்.
  • ரூ.800 கோடி செலவில் சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.
  • கடல் அரிப்பை தடுக்கவும்,கடல் மாசுப்பாட்டை குறைக்கவும் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற திட்டம் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.434 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புப் பணிகள்.
  • 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2,783 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக மாற்றப்படும்.
  • தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
  • பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் ரூ. 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • கோவை அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் வரை ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை 2025 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்.
  • சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi வசதி செய்து தரப்படும்.
  • அரசுப் பணியாளர் வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
  • புதிதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும்.
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித் துறைக்கு ரூ.22,562 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.1,509 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வனம் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1248 கோடி ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.24,476 ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு.
  • எழில்மிகு கோவை, மாமதுரை பெயர்களில் இந்த இரு நகரங்களையும் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.
  • பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ.1580 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மீனவர்கள் நலனுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு.
  • புதிரை வண்னார்கள் நல வாரியத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
  • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.3513 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
  • குடிமைப்பணி தேர்வுக்காக அரசு போட்டித் தேர்வு மையத்தில் பயில்வோருக்கு நிதி உதவி வழங்கப்படும். 
  •  உயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 
  • மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
  • தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
  • மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ,40 299 கோடி ஒதுக்கீடு
  • சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்.
  • சென்னை கிண்டியில் கருணாநிதி பெயரில் இந்த ஆண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும்.
  • இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.223 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு 3959 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து