எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இந்த வேளாண்மை பட்ஜெட் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 21) செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், "வேளாண் பெருமக்களுக்கு பெரிய திட்டங்கள் உள்ளது. பல துறைகளைச் சேர்த்து 2 மணி நேர பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து உள்ளார். ஆனால் வேளாண் பெருமக்களுக்கு முக்கியமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் இதில் இல்லை. கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் வெறும் ரூ.195 தான் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய ஏமாற்று வேலை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். இதைப் பற்றிய அறிவிப்பு இல்லை. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் ரகங்களை பிரித்து ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை வேளாண் மக்களுக்கு பெரிய ஏமாற்றம் அளிக்கும் அறிக்கையாக உள்ளது. விவசாயிகளை ஏமாற்றும் அரசாக தான் இந்த அரசை விவசாயிகள் பார்க்கிறார்கள். பயிர் காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவு இழப்பீட்டு தொகை பெற்று தந்த அரசு அதிமுக அரசு. வறட்சி வந்த போது இழப்பீட்டு தொகையை அதிகமாக வழங்கிய அரசும் அதிமுக அரசு தான்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வெள்ளதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.13,500 தான் இழப்பீடு வழங்கப்பட்டது. விவசாயிகள் கோரிக்கை வைத்தும் கூட முறையான கணக்கீடு செய்யவில்லை. எனது ஆட்சியில் இழப்பீட்டு தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. காப்பீட்டுக்கான ப்ரீமியம் தொகையை பெற முடியாத அவல நிலை தான் இந்த ஆட்சியில் உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் சேதம் அடைந்தது. இதை எல்லாம் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. நெல் மூட்டைகளை பாதுகாக்க தேவையான தார்ப் பாய்களை கூட இந்த அரசு செய்யவில்லை.
பொங்கல் பரிசில் இந்த அரசு முதலில் கரும்பை சேர்க்கவில்லை. இதற்கு எதிராக நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். மேலும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதை விளைவாக தான் இந்த அரசு கரும்பை பொங்கல் தொகுப்பில் வழங்கியது. குடிமராமத்து திட்டம், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த பட்ஜெட்டில் வேளாண் மக்களின் நலனுக்கு எந்த வித புதிய திட்டமும் இல்லை. இந்த அரசு விவசாயிகளின் வாழ்க்கையில் கண்ணாம்மூச்சி விளையாடும் அரசாக உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 18 hours 16 sec ago |
சிக்கன் சாசேஜ்![]() 4 days 17 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 1 day ago |
-
அக். 1,3-ம் தேதிகளில் தெலுங்கானாவில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் : பிரதமர் மோடி பேசுகிறார்
27 Sep 2023திருப்பதி : தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 1 மற்றும் 3-ம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை துவக்கம்
27 Sep 2023திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது
-
மேட்டுப்பாளையத்தில் இன்று நடக்கவிருந்த அண்ணாமலையின் நடை பயணம் வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
27 Sep 2023கோவை : மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறவிருந்த தமிழக பா.ஜ.க.
-
அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொது செயலாளர் எடப்பாடி அறிவிப்பு
27 Sep 2023சென்னை, அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
என் பெயரில் வீடு இல்லை. ஆனால், மத்திய அரசு லட்சக்கணக்கான மகள்களின் பெயரில் வீடுகளை கட்டி கொடுத்திருக்கிறது : பிரதமர் மோடி உருக்கம்
27 Sep 2023பொடேலி : என் பெயரில் வீடு இல்லை, ஆனால் நாட்டில் பல மகள்களின் பெயரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் மோ
-
இன்று மிலாடி நபி: தலைவர்கள் வாழ்த்து
27 Sep 2023சென்னை : மிலாடி நபி திருநாளையொட்டி தலைவர்கள் இஸ்லாமிய பெருமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி:
-
கர்நாடகாவில் நாளை மீண்டும் முழு அடைப்பு போராட்டம் : 2,000 அமைப்புகள் பங்கேற்பு என தகவல்
27 Sep 2023பெங்களூரு : தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை மீண்டும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப
-
ஆஸ்கர் விருதுக்கு மலையாள திரைப்படம் "2018" தேர்வு : டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகர் விருது
27 Sep 2023புதுடெல்லி : 2024-ம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக 2018 மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
அக்.27-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்
27 Sep 2023சென்னை : அக்.27-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன்
27 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
-
அனைத்து நதிகளையும் இணைப்பதே காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு : தஞ்சாவூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
27 Sep 2023தஞ்சாவூர் : காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று தே.மு.தி.க.
-
சந்திரபாபு வழக்கு: நீதிபதி விலகல்
27 Sep 2023புதுடெல்லி : ஆந்திராவில் திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
மக்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்: பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு முதல்வர் அறிவுரை
27 Sep 2023சென்னை, கோரிக்கை மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேச வேண்டும். அவர்களது பிரச்னையை காது கொடுத்து கேட்க வேண்டும்.
-
தொடர்ந்து பலத்த மழை: பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு : 2,500 கன அடியாக அதிகரிப்பு
27 Sep 2023திருவள்ளூர் : தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
25-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு டூடூலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்
27 Sep 2023கலிபோர்னியா : உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் நேற்று தனது 25-வது பிறந்த நாளை கொண்டாடியது.
-
மாணவர்கள் கடத்தி படுகொலை: மணிப்பூரில் தொடரும் வன்முறை: போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு : பதட்டம் நிறைந்த மாநிலமாக அறிவித்தது மத்திய அரசு
27 Sep 2023இம்பால் : மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மணிப்பூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை மீது போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி விரட்டியடித்தனர்.
-
நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர் : மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை: இஸ்ரோ
27 Sep 2023பெங்களூரு : நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
காவிரி நீர் மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் : டெல்லியில் நாளை நடக்கிறது
27 Sep 2023புதுடெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
-
ஊரகப்பகுதிகளில் ஏற்படும் குறைகளை களைய ஊராட்சி மணி அமைப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் இ.பெரியசாமி
27 Sep 2023சென்னை : ஊராட்சி பகுதிகளில் ஏற்படும் குறைகளை களைய ஊராட்சி மணி என்ற அமைப்பை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
-
கொரோனா போன்ற கொடிய தொற்று சீனாவில் மீண்டும் பரவும் அபாயம் : நிபுணர்கள் எச்சரிக்கை
27 Sep 2023பெய்ஜிங் : கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது.
-
தி.மு.க கூட்டணியில் சலசலப்பு ஏதும் இல்லை : சென்னையில் வைகோ பேட்டி
27 Sep 2023சென்னை : தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏதும் இல்லை என்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவானில் சுற்றுப்பயணம்
27 Sep 2023தைபே நகரம் : சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்
-
ராணுவ வீரர்கள் தேர்வு வழக்கில் தவறான தகவல்: பாதுகாப்புத் துறை மீது ஐகோர்ட் கிளை அதிருப்தி
27 Sep 2023மதுரை : ராணுவ வீரர்கள் தேர்வு வழக்கில் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்ததாக பாதுகாப்புத் துறை மீது மதுரை ஐகோர்ட் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
-
நீட் மதிப்பெண் பூஜ்ய விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
27 Sep 2023புதுடெல்லி : நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : சமூக ஊடகங்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை
27 Sep 2023சென்னை : கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டி.ஜி.பி.