முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : உயிரிழந்தோர் என்ணிக்கை 9 ஆக உயர்வு

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
Kanchipuram 2023 03 22

Source: provided

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே நேற்று காலை நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 16 பேருக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் என்ற பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் நடந்த வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீட்டர் அளவுக்கு உணரப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதையடுத்து காயமடைந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து நிகழ்ந்த போதே 5 பேர் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டாசு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும், விபத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுதர்சனும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். 

இந்த விபத்தில் படுகாயமடைந்த  பெண்கள் உள்பட 16 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து