முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த சந்தேகமும் வேண்டாம்: பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      இந்தியா
Amit-Shah 2023 03 30

பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்றும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பல்வேறு தலைப்புகளில் எழுந்த கேள்விகளுக்கும் விடையளித்தார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-

ராகுல்காந்தி குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்துள்ளது. இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் மோடி என்ற பிற்படுத்தப்பட்ட இனத்தை அவமானப்படுத்தி உள்ளார். அதற்காகவே அவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி உள்ளது.

2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதி பதவி தானாக காலியாகி விடும் என்று நமது நாட்டின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. இதற்காக பா.ஜ.க. தலைவர்களை ராகுல் தொடர்ந்து குறை கூறி வருகிறார்.

அவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமானால் மீண்டும் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். அதைவிடுத்து அடம்பிடித்து கொண்டிருந்தால் எந்த பலனும் இல்லை. நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு கட்சிகளுடன் தோழமையுடன் உள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அந்த தோழமை தொடரும் தமிழ்நாட்டில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கொண்டுள்ள கூட்டணியும் தொடர்கிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா இருக்கிறது.

நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு குறி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள். இப்போதுகூட ராகுல் பதவி இழப்பு விஷயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்ததாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.

ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத மற்ற கட்சி தலைவர்களை அவர்கள் எந்த அளவுக்கு குறிவைத்து செயல்பட்டனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்தன.

சி.பி.ஐ. மூலம் எனக்கு மிக கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. மோடிக்கு இருந்த நல்ல பெயரை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு எனக்கு அந்த அழுத்தத்தை கொடுத்தனர். ஆனால் அதற்கு பணியவில்லை. நான் அப்போது குஜராத் மந்திரியாக இருந்ததால் என்மீதும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை அமைப்புகள் அனைத்தையும் அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் மிக மிக மோசமாக, தவறாக கையாண்டது.

காங்கிரஸ் அரசு எங்களுக்கு எதிராக ஒரு சிறு ஊழல் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை. எனவேதான் விசாரணை அமைப்புகளை தூண்டி விட்டு எங்களை சிக்க வைக்க முயற்சி நடந்தது. கடைசியில் சி.பி.ஐ. மூலம் என்னை கைது செய்யவும் வைத்தனர்.

என்னை கைது செய்வதற்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் சரியான விளக்கமான பதிலை சொன்னேன். ஆனால் அவர்கள் மோடி பெயரை குறிப்பிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் நான் உண்மையைத்தான் சொன்னேன். சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை. கருப்பு சட்டை அணிந்து கொண்டு அலையவில்லை. சபை நடவடிக்கைகளை முடக்கவில்லை. கடைசியில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

சுதந்திரப் போராட்ட வீரர் சவார்கர் பற்றி ராகுல் அவதூறாக பேசுகிறார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை இப்படி அவமரியாதை செய்யக்கூடாது. அவர்கள் கட்சி மூத்த தலைவர்கள் இதுபற்றி ராகுலுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து