முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
Seeman 2023 01 22

சென்னை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளரான சீமானின் டுவிட்டர் கணக்கு நேற்று முன்தினம் திடீரென முடக்கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியின் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. 

சீமான் டுவிட்டர் கணக்கை முடக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில் சீமான் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்தது. 

முன்னதாக சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. 

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து