முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: மத்திய அமைச்சர் பதவி விலக கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      தமிழகம்
KS-Alagiri 2023 04 09

Source: provided

சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார். 

ஒடிசாவில் நேற்று முன்தினம் நடந்த கோர ரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது. 

கடந்த சில ஆண்டுகளாகவே ரயில் விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில் என கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிற பா.ஜ.க. அரசு, ரயில் விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ரூபாய் 40,000 கோடி நிதியை ஏன் ஒதுக்கவில்லை ? 

ஒடிசாவில் நடந்த இந்த கோர விபத்திற்கு யார் பொறுப்பு ? 1956-ம் ஆண்டு அரியலூரில் ரயில் விபத்து ஏற்பட்ட போது அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகிய முன்னுதாரணத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை போல, ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்திற்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ரயில் விபத்திற்கு உரிய பொறுப்பை ஏற்கிற வகையில் அவர் பதவி விலகுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதில் காட்டுகிற ஆர்வத்தை ரயில்வே பாதுகாப்பில் காட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து