முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து மக்களின் உடல் பருமனை குறைக்க திட்டம்: பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      உலகம்
Rishi-Sunak 2022 12 03

லண்டன், உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை வழங்கும் வகையிலான 2 ஆண்டு சோதனை திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்.

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை தரவுகளின்படி உடல்பருமன் காரணமாக இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. இதனால், அதிக நோயாளிகளை சமாளிக்க முடியாமல் தேசிய சுகாதார சேவை அமைப்பு தடுமாறுகிறது. 

இந்நிலையில் உடல் பருமனை குறைக்கும் மருந்துகளை மருத்துவமனைக்கு வெளியேயும் வழங்கும் வகையில் 2 ஆண்டு சோதனை திட்டத்தை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை வழங்கும் வகையிலான 2 ஆண்டு சோதனை திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார். 

40 மில்லியன் பவுண்ட் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து பேசிய பிரதமர் ரிஷி சுனக், 

உடல் பருமன் தேசிய சுகாதார சேவை மீது மிகுந்த அழுத்தத்தை உருவாக்குகிறது. உடல் எடையை குறைக்க மக்களுக்கு உதவும் வகையில் சமீபத்திய மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக, உடல் பருமனால் ஏற்படும் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தவிர்த்து மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவ முடியும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து