முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றன. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இவற்றை கொண்டு செல்லும் நோக்குடன், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்காக தனித்தனியே இணையதள பக்கங்கள் முகநூல், டுவிட்டர் என அனைத்திலும் கணக்குகள் துவங்கி கட்சிகளின் நிகழ்வுகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க.வின் புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். 

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவல் புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட http://DMK.in கழக வலைத்தளத்தைக் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று(நேற்று) தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட பயணத்தைத் தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து