முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய்கிழமை விமர்சனம்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      சினிமா
Tuesday-Review 2023-11-21

Source: provided

மகா லட்சுமிபுரம் எனும் ஊரில் மர்மமான முறையில் சிலர் மரணிக்கிறார்கள். இந்த மரணங்களுக்கு இறந்துபோன ஷைலு என்பவர் தான் காரணம் என்று மருத்துவர் ஒருவர் சொல்கிறார். யார் அந்த ஷைலு?, அவருக்கும் இந்த மரணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது தான் படத்தின் ஒரு வரிக் கதை. ஷைலு என்ற கதாபாத்திரத்தில் பயல் ராஜ்புத் நடித்திருக்கிறார். காமம் சார்ந்த நோயல் உடல் அளவிலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலிமிகுந்த வாழ்க்கையை தனது நடிப்பு மூலம் மிக சரியாக பிரதிபலித்திருக்கிறார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, அழுத்தமான வேடத்தில் பலம் வாய்ந்த பெண் அதிகாரியை பிரபதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் அஜய் பூபதி, திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.  பி.அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் தசரதி சிவேந்த்ராவின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் அனைத்தும் பயமுறுத்தும் வகையில் இருக்கிறது. திகில் அல்லது க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என எந்த ஜானராக இருந்தாலும் மேக்கிங் மிரட்டலாக இருந்தால் ரசிகர்களை கதையோடு கட்டுப்போட்டு பயணிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த செவ்வாய்கிழமை படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து