முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் உள்ள உறவை மேலும் பலப்படுத்த விருப்பம் : கென்யா அதிபர் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      உலகம்
Kenya 2023-12-03

Source: provided

புதுடில்லி : இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ, இரு நாடுகளும் சிறந்த நண்பர்கள் என தெரிவித்துள்ளார். மேலும், கென்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரெளபதி முர்முவின் அழைப்பின்பேரில், 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ , காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் ராஷ்டிரபதி பவன் வந்த அவருக்கு ஜனாதிபதி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு அரசுமுறை உபசரிப்பும், விருந்தும் வழங்கப்பட்டது.

பின்னர் வில்லியம் சாமோய் ரூடோ கூறியதாவது., இந்தியாவும், கென்யாவும் சிறந்த நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கென்யா சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், 1948ல் இருந்தும் வெவ்வேறு நிலைகளில் இரு நாடுகளும் ராஜதந்திர ஈடுபாட்டை கொண்டிருந்தோம். ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் எனது நல்ல நண்பர் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ளேன். கென்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை பலப்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

கிராமப்புற வளர்ச்சியில், குறிப்பாக விவசாயத்தில் கூட்டுறவை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து ஆலோசிக்கிறோம். விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தடுப்பூசிகள் தயாரிப்பில் எவ்வாறு பங்கு பெறலாம் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். இந்த சிறந்த நாட்டிலிருந்து, குறிப்பாக டிஜிட்டல் ஸ்பேஸ் பற்றி நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இதனால் டிஜிட்டல் ஸ்பேஸ் குறித்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்.

டிஜிட்டல் ஐடி, அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல், அரசு சேவையை வழங்குவதில் தொழில்நுட்பத்தின் இயல்பை மேம்படுத்துதல், இந்தியா மிகச் சிறப்பாகச் செய்திருப்பது போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள கென்யாவிலிருந்து எங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து