முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடி மின்னல் காதல் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      சினிமா
Edi-Minal-Love 2024-04-02

Source: provided

வெளிநாடு செல்ல இருக்கும் நாயகன் சிபி, அதற்கு முன்பாக தனது காதலி பவ்யா ட்ரிகாவுடன் காரில் ஜாலியாக வலம் வர, திடீரென்று குறுக்கே வருபவர் மீது மோதி விடுகிறார். இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்துவிடுகிறார். தெரியாமல் நடந்த விபத்து என்றாலும், தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து சிபி வருத்தப்பட்டாலும், அவர் நாடு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் காதலி பவ்யா ட்ரிகா செய்து வருகிறார்.

இதற்கிடையே, உயிரிழந்த நபரின் மகன் ஆதித்யா தனது அப்பா இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். அவருக்கு பாலியல் தொழிலாளி யாஷ்மின் பொன்னப்பா ஆதரவளிக்க, இறந்து போனவர் வாங்கிய கடனுக்காக அவருடைய மகன் ஆதித்யாவை தாதா வின்செண்ட் நகுல் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்.

இந்த இரண்டு கதைகளும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்க, தன்னால் உயிரிழந்தவரின் மகன் தான் ஆதித்யா என்பது தெரியாமலேயே அவரை காப்பாற்றும் முயற்சியில் நாயகன் சிபி ஈடுபடுகிறார். ஆனால், தனது தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்பதை தெரிந்துக்கொள்ளும் சிறுவன் ஆதித்யா, சிபி மீது கொலை வெறிக்கொள்ள, அதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை சொல்வது தான் ’இடி மின்னல் காதல்’.

எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தை வைத்துக்கொண்டு, பலவிதமான கதாபாத்திரங்களின் வடிவமைப்போடு இயக்குநர் பாலாஜி மாதவன் அமைத்திருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், சில இடங்களில் சற்று குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. அதேபோல், பலம் வாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தை, பலவீனமான முறையில் வடிவமைத்த விதம், அதில் நடித்த நடிகர் ஆகியவை படத்திற்கு குறையாக அமைந்தாலும் சிறுவன் ஆதித்யாவின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு அந்த குறையை மறைத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘இடி மின்னல் காதல்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல மழை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து