முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023-06-01

Source: provided

புதுடெல்லி : கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். வயநாடு தொகுதியில் இன்று மதியம் 12 மணி அளவில் தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுவதால் இன்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

வரும் 26-ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வயநாடும் ஒன்று. கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து