முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க., டி.டி.வி. வசம் வந்துவிடும் என்று அண்ணாமலை கூற அவர் என்ன ஜோசியரா? - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
Sellur-Raju 2024-04-13

Source: provided

மதுரை : அ.தி.மு.க., டி.டி.வி. வசம் வந்து விடும் என்று அண்ணாமலை கூறுவற்கு அவர் என்ன ஜோசியரா? என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மதுரை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு மேல ஆவணிமூல வீதியில்  உள்ள மார்வாடி சங்க பிரதிநிதிகளிடம்  முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டார். அப்போது செல்லூர் ராஜூவுக்கு பாசி மாலைகள் அணிவித்தும்  டர்பன் (சாபா) தலைப்பாகை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். இதில் நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், சக்திமோகன், எம்.எஸ்.கே.மல்லன், கே.ஜெயவேல், தளபதி மாரியப்பன்,எம்.ஜி.ராமச்சந்திரன், சக்தி விநாயகர் பாண்டியன், மார்க்கெட் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.நிருபர்களிடம் கூறியதாவது-அ.தி.மு.க., திமுக தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துவிட்டன என அமித்ஷா பேசியது குறித்த கேள்விக்கு,அமித்ஷா எதையாவது பேசுவார். திராவிட இயக்கங்கள் தான் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தது.திராவிட இயக்க திட்டங்களையே மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. எல்லா மாநிலங்களையும் விட தமிழகமே எல்லாவற்றிலும் முதன்மையாக உள்ளது.குஜராத், உபி போன்ற மாநிலங்களுக்கே தமிழகத்தின் நிதியை தான் கொடுக்கிறார்கள். தமிழக நிதியை தான் வடமாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை கொடுக்கிறார்கள். தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் அப்படி பேசுகிறார்கள்.

அண்ணாமலை பேச்சல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள முடியாது.அண்ணாமலை என்ன ஜோசியரா? அவர் என்ன விசுவாமித்திரரா? அ.தி.மு.க. ஒரு பீனிக்ஸ் பறவை போல. எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்துள்ள இயக்கம் அ.தி.மு.க. அண்ணாமலை ஒரு நகைச்சுவையாளராக மாறிவிட்டார். தோல்வி பயத்தில் ஏதேதோ பேசி வருகிறார். அண்ணாமலை பேசட்டும். இன்னும் எத்தனை நாளுக்கு அப்படி பேசுவார் என பார்ப்போம். அண்ணாமலையை ஏற்கனவே கிழி கிழினு கிழித்துவிட்டேன். இனி அண்ணாமலையை பற்றி பேச ஒன்றும் இல்லை. தமிழகத்திலேயே அதிகம் கூட்டம் கூடும் பாண்டிபஜாரில் ரோடு ஷோ நடத்தியும் அமித்ஷா பேரணிக்கு ஆள் இல்லை. தேநீர் கடையில் நின்றவர்கள் கூட அமித்ஷா கை அசைத்ததற்கு பதிலுக்கு கை அசைக்கவில்லை.

தமிழகத்தில் திமுக, அதிமுக ஊழல் செய்தனர் என அமித்ஷா பேசியது குறித்த கேள்விக்கு, இங்கே நடந்ததை காட்டிலும் அங்கே நிறைய நடந்துள்ளது.தி.மு.க.தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி. எனவே அமித்ஷா ஒட்டுமொத்தமாக திராவிட கட்சிளை பற்றி பேசுவது அண்ணாமலையின் மறுவடிவமாக பேசுகிறார். இன்று பரப்புரைக்கு செல்லும் அமைச்சர்கள், முதலமைச்சர், உதயநிதியை பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்கின்றனர். பரப்புரைக்கே செல்ல முடியாமல் உள்ளனர். அமித்ஷா தி.மு.க.வை பேச வேண்டியதை மொத்தமாக மாற்றி பேசி உள்ளார். அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து