முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் எதையும் செய்யவில்லை: காஞ்சிபுர பிரசாரத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      தமிழகம்
EPS 2023 03 27

காஞ்சிபுரம், மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை என்று காஞ்சிபுர பிரசாரத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டினார்.

காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பெரும்பாக்கம் சேகரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- அ.தி.மு.க இரண்டாக , மூன்றாக சிதறும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணம் ஈடேறாது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகள் பற்றி பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் எதுவும் இடம் பெறவில்லை. மக்களுக்கு சேவை செய்வதில் அ.தி.மு.க முன்னிலையில் உள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம்  திகழ அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள்தான் காரணம். மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை. கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், மக்கள் வீடு கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில், திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. திமுக ஆட்சியின் மின் கட்டண உயர்வால் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கைத்தறி தொடர்பான எந்த திட்டமும் இடம்பெறவில்லை. அரிசி, பருப்பு விலை உயர்ந்துள்ளதால், மக்கள் படாதபாடு படுகின்றனர். மக்களை குடும்பமாக கருதுவதால் தான், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக கொண்டு வந்தது. அதிமுகவை பிரிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்திற்கு காரணம் திமுகவினர் தான்.

நாட்டு மக்களுக்காக வாழ்கின்ற கட்சி அதிமுக, கருணாநிதி குடும்பம் வீட்டு மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக வாழ்ந்தவர்கள் யார், வீட்டுக்காக வாழ்ந்தவர்கள் யார் என மக்களுக்கு தெரியும். இந்தியாவிலேயே ஜிஎஸ்டி அதிகமாக கொடுக்கும் 2வது மாநிலம் தமிழகம். ஆனால் மத்திய அரசு ஜிஎஸ்டி வருவாய் தருவதில்லை. தமிழகத்தை குட்டிச்சுவராக்கிய ஸ்டாலின், இந்தியாவை காக்க போகிறாரா?. ஊழலில் இருந்து தப்பிக்கதான் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வர ஸ்டாலின் துடிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து