முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      இந்தியா
Smriti-Rani 2024-04-29

Source: provided

அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ஸ்மிருதி இராணி சுமார் 200 மீட்டர் தூரம் சாலை பேரணி நடத்தினார். பேரணியில் உத்தரபிரதேச அமைச்சர் மயங்கஷ்வர் சரண் சிங் மற்றும் ஸ்மிருதி இராணியின் கணவர் ஜுபின் இராணி ஆகியோர் பங்கேற்றனர். 

காங்கிரசின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில், கடந்த 2019 தேர்தலில் ராகுல் காந்தியை சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். தற்போதைய தேர்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மீண்டும் ஸ்மிருதி இராணி மீண்டும் களம் காண்கிறார். 

அதே நேரம், இத்தொகுதிக்கு காங்கிரசின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கு ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார்? என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேதி தொகுதியில் 5-ம் கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து