முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோ தொகுதியில் 3-வது முறையாக போட்டி: வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத்சிங்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

Source: provided

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1-ம் தேதி கடைசி கட்டமான 7-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இதனிடையே, மே 20-ம் தேதி 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த 5-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

அப்போது அவருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த தலைவர்கள் அங்குள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். 

மேலும் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ தொகுதியில் கடந்த காலங்களில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போட்டியிட்டுள்ளார். லக்னோவில் 5-ம் கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து