முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      இந்தியா
Arvind-Kejriwal-wife-2024-0

Source: provided

புதுடெல்லி : டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா அவ்வப்போது சந்தித்து வருகிறார். அது மட்டுமல்லாது அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு அளித்த அனுமதியை திகார் சிறை நிர்வாகம் ரத்து செய்து இருந்தது. இதனையடுத்து விளக்கம் அளித்துள்ள சிறை நிர்வாகம், 

சிறையின் விதிப்படி கைதிகள் வாரத்திற்கு இரு முறை மட்டுமே தங்களை சந்திக்க வருபவர்களிடம் பேசலாம். அதன் படி இன்று 29-ம்தேதி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, கெஜ்ரிவாலை சந்திக்கிறார். தொடர்ந்து 30-ம் தேதி பஞ்சாப் முதல்வரும் கெஜ்ரிவாலை சந்திக்கிறார்.

இதன் காரணமாக இந்த வாரத்தில் இரண்டு சந்திப்புகள் நிகழ உள்ள நிலையில் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்து இருந்தது பெரும் சரச்சையை உருவாக்கியது. 

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து