முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியில் முக்கிய மைல்கல்லை எட்டிய டோனி, ருதுராஜ் கெய்க்வாட்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      விளையாட்டு
CSK team 2024-03-27

Source: provided

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் வேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். அதேபோல் சி.எஸ்.கே.வுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.டோனி சாதனை படைத்துள்ளார்.

விரைவாக ரன்கள்...

ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இந்தப் போட்டியில் 69 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் வேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்களில் ஒருவராக அவர் இணைந்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் 57 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார்.

5 ஆயிரம் ரன்கள்... 

அதேபோல் 20-வது ஓவரில் களமிறங்கிய எம்.எஸ்.டோனி, ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். மும்பைக்கு எதிரான இந்தப் போட்டியில் 20 ரன்கள் எடுத்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 ஆயிரம் ரன்கள் குவித்த இரண்டாவது வீரராக அவர் மாறினார். இதுவரை சிஎஸ்கேவுக்காக 250 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.டோனி 5016 ரன்கள் குவித்துள்ளார். 5529 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள்:

1) கிறிஸ் கெயில் - 48 இன்னிங்ஸ்கள்.

2) ஷான் மார்ஷ் - 52 இன்னிங்ஸ்கள்.

3) ருதுராஜ் கெய்க்வாட் - 57 இன்னிங்ஸ்கள்.

4) கே.எல்.ராகுல் - 60 இன்னிங்ஸ்கள்.

5) சச்சின் டெண்டுல்கர் - 63 இன்னிங்ஸ்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து