முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      சினிமா
Prakash Raj 2023-11-24

Source: provided

பெங்களூரு : நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில் ‘தேசத்தின் துயரக் குரல்’ என்ற தலைப்பில், ஒப்பாரி வடிவிலான பிரச்சாரப் பாடல் வெளியாகி, இந்திய அளவில் வைரலாகி வருகிறது. இப்பாடலை புத்தர் கலைக் குழுவைச் சேர்ந்த மகிழினி மணிமாறன் பாடியுள்ளார். இப்பாடலை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், இப்பாடலை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல். எதை நாம்  தேர்ந்தெடுக்க போகிறோம்?” என பதிவிட்டுள்ளார். மேலும் நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து