முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      இந்தியா
Mamtha 2023 04 22

Source: provided

புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அசாமில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஆதரித்து சில்சார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, ‘பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது. அவர்கள் (பாஜக) ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக ஆக்கிவிட்டனர். இதுபோன்ற ஆபத்தான தேர்தலை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை. இன்டியா கூட்டணி வெற்றி பெற்றால், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), பொது சிவில் சட்டம் ஆகியவை இருக்காது. அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் நாங்கள் ரத்து செய்வோம்.

அசாமில் நிறுத்தப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 பேருக்கும் வாக்களித்து அவர்களை வெற்றிபெற வையுங்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அசாமின் 126 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும். இது ஒரு டிரெய்லர்தான். இறுதிப் போட்டி இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன்” என்று மம்தா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து