முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      தமிழகம்
Chennai-high-court2

Source: provided

சென்னை :  விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இதனிடையே விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 

மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்கள், தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 14-ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளோம். 

எனவே அவரை தகுதி நீக்கம் செய்யவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.  

இந்த வழக்கை விசாரித்த பின் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 

தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களே நடவடிக்கை எடுப்பார்கள். 

இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து