முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கம் போல என்.சி.இ.ஆர்.டி செயல்படுகிறது : ஜெய்ராம் ரமேஷ் வருத்தம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
Jairam-Ramesh- 2023-06--01

Source: provided

புதுடெல்லி : ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் போல தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  (என்.சி.இ.ஆர்.டி) செயல்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மாணவர்களுக்கான பாடத்திட்ட புத்தகத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில்,  

நீட் 2024-ம் ஆண்டுக்கான தேர்வில் வழங்கப்பட்ட கருணை அடிப்படையிலான மதிப்பெண்களுக்கு என்.சி.இ.ஆர்.டி மீது தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) குற்றம் சுமத்தியுள்ளது. இதன் மூலம் தன் மீதான கவனத்தை தேசிய தேர்வு முகமை திசை திருப்ப முயற்சிக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அங்கம் போல என்.சி.இ.ஆர்.டி செயல்பட்டு வருகிறது. அதன் பணி பாடப்புத்தகங்களை தயாரிப்பது. மாறாக துண்டு பிரசுரங்கள் தயாரிப்பது அல்ல.

திருத்தம் செய்யப்பட்ட 11-ம் வகுப்பு பாடப்புத்தகம் மதச்சார்பின்மையை விமர்சிக்கிறது. இதன் மூலம் அதனை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கிறது என கருதலாம்.

மதச்சார்பின்மை நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படைகளில் ஒன்று என்பதை பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவு செய்துள்ளன. இதன் மூலம் அரசியலமைப்பை தாக்குகிறது என்.சி.இ.ஆர்.டி. 

அந்த நிறுவனம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாக இருக்கவேண்டுமே ஒழிய  நாக்பூர் அல்லது நரேந்திர கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாக இருக்க கூடாது. பள்ளியில் என்னை பக்குவமாக்கிய என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள் அனைத்தும் இப்போது தரம் தாழ்ந்து உள்ளன என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து