முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      ஆன்மிகம்
Sabarimala 2024-07-03

திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர். 

சபரிமலை ஐயப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள். தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரியாக கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு மகேஷ் மோகனரு ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள். 

இந்த நிலையில் தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரரு ராஜீவரு விலக முடிவு செய்துள்ளார். அவருக்கு பதிலாக புதிய தந்திரியாக அவரது மகனான கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட உள்ளார். 

ஆண்டு தோறும் மலையாள மாதமான சிங்க மாதம் (தமிழில் ஆவணி மாதம்) தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி சிங்க மாதம் தொடங்குகிறது.

சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்று சபரிமலை கோவில் தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்கிறார். அன்றைய தினம் மாலை அவரது முன்னிலையிலேயே சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி திறக்க உள்ளார். 

தந்திரி பொறுப்பில் இருந்து விலகினாலும், சபரிமலை விழாக்களில் கண்டரரு ராஜீவரு பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தந்திரியாக பொறுப்பேற்க உள்ள கண்டரரு பிரம்மதத்தன் தனது எட்டாவது வயதில் பூஜைகள் பற்றி படிக்க தொடங்கி இருக்கிறார். 

சட்டத்துறையில் பணியாற்றி வந்த அவர், சபரிமலை பூஜை பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அந்த பணியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து