முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் : அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையின்படி வருகிற 31-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்திற்கு  திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லையென்றும்; 28 சதவீத அளவில் குறைவாக மழை பெய்து இருக்கிறதென்றும், அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ள கர்நாடக அரசு, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை எதிர்த்து காவிரி நீர்மேலாண்மை வாரியத்திடம் மேல் முறையீடு செய்யப் போகிறோம் என்றும் கூறி உள்ளது. 

கர்நாடகாவில் உள்ள ஹாரங்கி அணையில் 73 சதவீத தண்ணீரும் , ஹேமாவதி அணையில் 55 சதவீத தண்ணீரும் , கிருஷ்ணராஜசாகர் அணையில் 54 சதவீத தண்ணீரும், கபினியில் 96 சதவீதம் தண்ணீரும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கட்டின் முழு கொள்ளளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது. 

அவ்வாறு இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.  கர்நாடக அரசு போலவே தமிழக அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடி வெடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து