முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      இந்தியா
Raini-2024-05-20

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வட கேரளா முதல் மகராஷ்டிரா வரையிலான கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆந்திரா கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள சூறாவளி போன்றவற்றால், கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இந்த மழை இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் வட மாவட்டங்களில் கன மழையும், மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.

இந்த நாட்களில் கேரளா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் அதிக அலைகள் மற்றும் புயல்கள் எழ வாய்ப்பு உள்ளதாக கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் மழை காரணமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் புயல் காரணமாக மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து