எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்களால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தனது சுதந்திர தின உரையில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற இந்த விழாவின் தருணங்களுடன், பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மிகத் தீவிரக் கருத்துகளை முன்வைத்தார். கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
பிரதமர் தனது உரையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து, இந்தக் கொடுஞ்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து எனது வேதனையை நான் வெளிப்படுத்துகிறேன். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள் குறித்து நாம் அனைவரும் ஒரு சமூகமாக சிந்திக்க வேண்டும். இந்தக் கொடுமைகள் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. அதனை என்னால் உணர முடிகிறது. இத்தகைய செயல்களை செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்பதை அறியும் வகையில் செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான தண்டனையை அனைவரும் அறியும் வகையில் செய்ய வேண்டியது இன்றைய அவசியத் தேவை.
பெண் உரிமை சார்ந்த மேம்பாடு என்பது அவசியாமானது. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு என்பது பெண்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை மட்டுமல்ல, தாயின் பராமரிப்பில் உள்ள குழந்தை சிறந்த குடிமகனாக வளர்வதை உறுதி செய்வதற்கான நோக்கமும் அடங்கியுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சுமார் 10 கோடி பெண்கள் பலன் அடைந்துள்ளனர். பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்து வருவதை கண்டு பெருமை கொள்கிறோம். இது சமூக மாற்றத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. பல துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் உரையின் மேலும் சில முக்கிய அம்சங்கள்: “தேசத்தின் விடுதலைக்காக தங்களது உயிரை துறந்தவர்களுக்கு இந்நேரத்தில் வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்த நாடு அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ‘வளர்ந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. இதற்காக பலதரப்பட்ட மக்கள் உழைத்து வருகின்றனர். அன்று 40 கோடி மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றினார். தற்போதுள்ள 140 கோடி பேர் தேசத்தை வல்லரசு ஆக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் நமது கவலை அதிகரித்துள்ளது. இருந்த போதும் நாம் அதிலிருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசம் துணை நிற்கும். மற்ற ஜி20 நாடுகளை விடவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்து இந்தியா அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதில் விண்வெளித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதை கருத்தில் கொண்டு விண்வெளித் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம்.
உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை இந்தியா விரைவில் அடையும். 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த வேண்டுமென்பது நமது கனா. இந்த நேரத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நம் வீரர், வீராங்கனைகளை வாழ்த்துகிறேன். ‘வளர்ந்த பாரதம் 2047’ இலக்கை அடைய நாம் 24x7 உழைக்க வேண்டும். சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன.
அண்டை நாடுகளில் அமைதியை உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்வி பயில்வதற்கான இடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டிய அவசியம் இருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதில் பெரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடிக்கடி நடத்தப்படும் தேர்தல் காரணமாக தேசத்தின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகின்றன. அதை கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரிக்க வேண்டும். இயற்கை பேரிடரில் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், சொத்துகளையும் இழந்துள்ளனர்; தேசமும் நஷ்டத்தை சந்தித்தது. அவர்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
#VocalForLocal என்பது இந்திய பொருளாதாரத்தின் மந்திரமாக மாறியுள்ளது. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மூலம் ஒவ்வொரு மாவட்டமும் இப்போது அதன் உற்பத்தியில் பெருமை கொள்கிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் நிபுணத்துவம் பெற அதன் தனித்துவமான பலத்தை அடையாளம் காண முயல்கிறது. ஏன் ஒவ்வொரு உபகரணத்திலும் 'மேட் இன் இந்தியா' சிப் இருக்கக் கூடாது? இந்தக் கனவை நனவாக்கும் ஆற்றல் நம் நாட்டிற்கு உண்டு. 6G நெட்வொர்க்குகளின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். அரசியலில் ஒரு லட்சம் இளைஞர்களை, குறிப்பாக அரசியல் பின்புலம் இல்லாத குடும்பங்களை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும். வாரிசு, சாதிய தீமைகளை எதிர்த்துப் போராட, இந்திய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதே இதன் நோக்கம்” என்றார் பிரதமர் மோடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் போட்டியிடும் 60 தொகுதிகளை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
20 Jan 2026சென்னை, சென்னையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் போட்டியிடவுள்ள 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளதாக தகவல் வ
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரியில் இளைஞர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Jan 2026சென்னை, சென்னை வேளச்சேரியில் பார்த்திபன் என்ற இளைஞரை இருவர் அரிவாளால் வெட்டிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


