முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 தரவரிசை பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 267 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சுற்றுப்பயணம்... 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான புதிய டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

லியாம் லிவிங்ஸ்டன்... 

இந்த புதிய தரவரிசை பட்டியலில் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் (253 புள்ளி) 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் (211 புள்ளி) 2வது இடத்திலும், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (208 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (881 புள்ளி) முதல் இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (805 புள்ளி) 2வது இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (800 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.

முதலிடத்தில் இந்தியா....

இதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தி அடில் ரஷித் (721 புள்ளி) முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் அஹேல் ஹொசைன் (695 புள்ளி) 2வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (668 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர். டி20 தரவரிசை பட்டியலில் அணிகளுக்கான வரிசையில் இந்தியா (267 புள்ளி), ஆஸ்திரேலியா (257 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (255 புள்ளி), இங்கிலாந்து (253 புள்ளி), நியூசிலாந்து (247 புள்ளி) முதல் 5 இடங்களில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து