முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 புதிய திட்டங்களை செயல்படுத்தக்கோரி மத்திய அமைச்சர் கட்காரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு மனு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      தமிழகம்
AV-Velu 2024-10-01

Source: provided

சென்னை : தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டப்பணிகளான கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - சென்னை வெளிவட்டச்சாலை மேம்பாலப் பணிகள், கோயம்புத்தூர், திருவாரூர் புறவழிச்சாலைகள் உட்பட 11 புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டி கோரிக்கை மனுவை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம், தமிழக அமைச்சர் வேலு வழங்கினார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் டெல்லியில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர்கள் அஜய் தம்தா, எல்.முருகன், தமிழக அரசின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டப்பணிகளாக, கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மற்றும் மதுரவாயல் - சென்னை வெளிவட்டச்சாலை வரையிலான உயர்மட்டச்சாலை, செங்கல்பட்டு - உளுந்தூர்பேட்டை வரை எட்டு வழிச்சாலையாக தரம் உயர்த்துதல், திருவாரூர் புறவழிச்சாலை, கன்னியாகுமரி- களியக்காவிளை வரை நான்கு வழிச்சாலை அமைத்தல், விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் 4 வழிச்சாலை பணியை விரைவு படுத்துதல் குறித்து அமைச்சர் எவ.வ.வேலு வலியுறுத்தினார்.

மேலும், திருவாரூர் ரயில்வே மேம்பாலம் மறு கட்டுமானம் செய்தல், திருவண்ணாமலை மற்றும் பல்லடம் புறவழிச்சாலை அமைத்தல், வள்ளியூர் - திருச்செந்தூர் சாலை, கொள்ளேகால் – ஹானூர் சாலை, மேட்டுப்பாளையம் – பவானி சாலை, பவானி – கரூர் சாலை ஆகிய நான்கு சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல், திருச்சி (பால் பண்ணை) - துவாக்குடி வரையிலான சாலையை மேம்படுத்துதல், கோயம்புத்தூர் புறவழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல், தாம்பரம் – மதுரவாயல் – மாதவரம் புறவழிச்சாலையில் (சென்னை புறவழிச்சாலை) விடுபட்ட இணைப்பு வசதிகளை வழங்குதல் ஆகிய பணிகள் தொடர்பாக கோரிக்கை அளித்து வலியுறுத்தினார்.

தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்தார். கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர்.செல்வராஜ், போக்குவரத்துத்துறை ஆணையர் சுஞ்சோங்கம் ஜாதக் சிறு, நெடுஞ்சாலைத்துறை தனி அலுவலர் (டெக்னிக்கல்) இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் மு.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து