எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் ‘சதி திட்டம்’ ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையை தொடங்கி உள்ளது.
மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கும்மிடிபூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. 19 பயணிகள் காயங்களுடன் தப்பித்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சிலர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் மூவர் கடுமையான காயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் மதுக்கர் சவுத்ரி நேற்று (அக்.12) நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ரயில்வே தண்டவாளங்கள், இணைப்பு பாதைகள், தடுப்புகள், சிக்னல்கள், ரயில் நிலைய எலெக்ட்ரானிக் உள்இணைப்பு அமைப்புகள், கன்ட்ரோல் பேனல்கள் உள்ளிட்ட ரயில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் மதுக்கர் சவுத்ரி, “விபத்து நடந்த இடத்தை பார்வையிடவே இங்கு வந்திருக்கிறேன். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த அறிவதற்கு முதலில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட வேண்டும். பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்க வேண்டும். முழு விசாரணைக்கப் பிறகே விபத்துக்கான காரணம் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்” என தெரிவித்தார்.
விபத்துக்கு சதி காரணமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "இந்த தருணத்தில் நான் எதையும் தெரிவிக்க முடியாது. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும். விசாரணை அடுத்த வாரம் தொடங்கும்" என தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், "மீட்புப் பணிகள்தான் முதன்மையானது. மிகப் பெரிய விபத்துதான் என்றாலும், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை. 8 பேர் மட்டுமே காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த அரை மணி நேரத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், சிலர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு மட்டுமே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு சிறிய காயங்கள்தான் ஏற்பட்டுள்ளன. யாரும் ஆபத்தான நிலையில் இல்லை. சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இன்று இரவுக்குள் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுவிடும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்துக்கு சதி காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து நடந்த இடத்தில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவிடம் என்ஐஏ அதிகாரிகள் தகவல் கேட்டுள்ளதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி த.வெ.க.வின் பொதுக்கூட்டம்? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
19 Dec 2025சேலம், ஈரோட்டில் த.வெ.க.
-
எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி?
19 Dec 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்
19 Dec 2025நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
தமிழ்நாட்டில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி: 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடி நீக்கம்
19 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்க
-
கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
19 Dec 2025சென்னை, கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆலோசனை நடத்தினார்.
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
19 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங
-
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்
19 Dec 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்
-
சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம்
19 Dec 2025சென்னை, சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
19 Dec 2025பிரசல்ஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
19 Dec 2025சென்னை, செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
என்னை வளர்த்தெடுத்த ஆசான்: பேராசிரியர் அன்பழகனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
19 Dec 2025சென்னை, என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர் என்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தொடர் வெற்றிகளை பே
-
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் டிச.22-ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
19 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள
-
செவிலியர் பணிக்கு காலி இடங்கள் தற்போது இல்லை: அமைச்சர் தகவல்
19 Dec 2025சென்னை, செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
19 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி தங்கம் 1 கிராம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனையானது.
-
பீகார் ஹிஜாப் சர்ச்சை: அரசு வேலையை உதறிய பெண்..!
19 Dec 2025பீகார் ஹிஜாப் சர்ச்சையால் அரசு வேலையை வேண்டாம் என்ற புறக்கணித்த பெண் டாக்டர், பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு சென்றதாக தகவல் வெளியாகி
-
43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 புதிய மின்சாரப் பேருந்துகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
19 Dec 2025பூந்தமல்லி மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் புதிதாக 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியசைத்து த
-
இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: பிரதமர் மோடி குறித்து அமெரிக்கா பெருமிதம்
19 Dec 2025சென்னை, இந்தியாவில் ஒரு நண்பர் இருப்பதாக பிரதமர் மோடியின் படத்தை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
-
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக சாதனை படைத்த கான்வே - லதாம் ஜோடி
19 Dec 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற உலக சாதனையை கான்வே - லதாம் இணை படைத்துள்ளது.
-
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 152 விமானங்கள் ரத்து
19 Dec 2025புதுடெல்லி, பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று 79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகளை ஜனவரி 5 - க்குள் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் கெடு
19 Dec 2025சென்னை, ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
டிராவிஸ் ஹெட் அபார சதம்: 356 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸி.,
19 Dec 2025அடிலெய்டு, டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 356 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
-
யாருடன் விருந்துக்கு செல்ல வேண்டும்: காம்பீருக்கு கபில்தேவ் அறிவுரை
19 Dec 2025புதுடெல்லி, பயிற்சியாளர் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை.
-
சாந்தி மசோதா நிறைவேற்றம்: தொழில்நுட்பத்துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர் மோடி
19 Dec 2025டெல்லி, இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் சாந்தி மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி ப
-
துணை ராணுவம் திடீர் தாக்குதல்: சூடானில் 16 பேர் பலி
19 Dec 2025கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில் உள்ள தெற்கு கார்டூமின் மாகாணம் டில்லிங் பகுதியில் துணை ராணுவப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
-
வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடியவிடிய தர்னா
19 Dec 2025புது டெல்லி, வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


