எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார். இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 5 அடி உயரமுள்ள விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக 4 டன் மணலை பயன்படுத்தி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரைசதங்களுடன் 9,040 ரன்கள் குவித்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 13,906 ரன்கள் குவித்துள்ளார்.மேலும், 125 டி20 போட்டியில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________________________________________________
தோல்வி குறித்து டெண்டுல்கர்
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இதனால் எளிதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "0 - 3 என சொந்த மண்ணில் தோல்வி அடைவது ஜீரணிக்க முடியாத விஷயம். தோல்வி குறித்து நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. இது தயாராவதில் தவறு நடந்ததாலா? சுமாரான ஷாட் செலக்சன் காரணமாகவா? சுமாரான பயிற்சி காரணமாகவா? என்று சோதிக்க வேண்டும். 3-வது போட்டியின் முதல் இன்னிங்சில் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் 2 இன்னிங்சிலும் அசத்தினார். தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்திற்கு முழு பெருமை. இந்தியாவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது எவ்வளவு சிறந்த முடிவு" என்று பதிவிட்டுள்ளார்.
__________________________________________________________________________________________
டோனிக்கு பாண்டிங் புகழாரம்
டோனி அணியில் கேப்டனாக இல்லாவிட்டாலும் அவர் சிறந்த தலைவர் மற்றும் வழிகாட்டி என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " இரண்டு வருடங்களுக்கு முன்பு டோனி மோசமான ஐ.பி.எல். சீசன்களை கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் பழைய டோனியாக திரும்பி வந்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தினார். சிஎஸ்கே அணி அவரை முழு சீசனுக்கும் பெற முடியாமல் போகலாம்.
ஆனால் அவரிடமிருந்து சிறந்ததை பெறுவதற்கு, அவருக்கு தேவையான ஓய்வு கொடுத்து அணி நிர்வாகம் அவரை பயன்படுத்தும். அவர் எந்த அணியில் இருந்தாலும் கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட, சிறந்த தலைவராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார். தற்போது சிஎஸ்கே அணியில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவர் மிகவும் முக்கியமானவர். அவர் களத்திற்கு வெளியே இருந்தும் அணிக்கு தேவையானதை கொண்டு வருவார். அவர் இப்பொழுதும் கடைசி 20 பந்துகளில் பேட்டிங் செய்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவர் இப்படி விளையாடுவதன் மூலமும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று காட்டுகிறார்" என கூறினார்.
__________________________________________________________________________________________
இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. இந்நிலையில், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (654 புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு வந்துள்ளார். தீப்தி சர்மா (538 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 19வது இடத்திற்கு வந்துள்ளார். பேட்டிங் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (728 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், தீப்தி சர்மா (703 புள்ளி) 2வது இடத்தில் உள்ளார். ரேனுகா சிங் தாகூர் (424 புள்ளி) 4 இடம் முன்னேறி 32வது இடத்திற்கு வந்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (378 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார்.
__________________________________________________________________________________________
பட்லர் கீப்பீங் செய்ய மாட்டார்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு ஒரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி இன்று நடைபெறுகிறது. இதையடுத்து டி20 தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடருக்கு மட்டும் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். இதன் காரணமாக அவர் டி20 தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸூக்கு சென்றுள்ளார்.
பொதுவாக கேப்டன் பொறுப்பு மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொள்ளும் பட்லர், வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடரில் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக பில் சால்ட் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பட்லர் மீண்டும் காயம் அடைவதை தடுக்கும் பொருட்டு அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய மாட்டார் என கூறப்படுகிறது.
__________________________________________________________________________________________
தொடரை வெல்வோம் - ஷிகர் தவான்
இந்திய அனி இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாம் தொடரை வெல்வோம் என ஷிகர் தவான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலிய மண்ணில் நாம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கின்றேன். கடந்து இரண்டு தொடர்களாக ஆஸ்திரேலிய மண்ணில் நாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். எனவே அதே மனநிலையுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய மண்ணுக்கு இந்திய அணி செல்லும். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் அதிகளவு விளையாடி இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய அனுபவம் இளம் வீரர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
இளம் தலைமுறையினரும் நல்ல நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறார்கள். தங்களுடைய திறமையை அவர்கள் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ரன் குவிப்பது என்பது அவர்களுக்கு நிச்சயம் சாதகமான விஷயமாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் வேகம் என்பது ஒரு சவாலாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நமது வீரர்கள் தயாராகிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா கூட்டணியில் இந்திய அணியில் திறமை வாய்ந்த சீனியர்கள், இளைஞர்கள் கலந்த வகையில் இருக்கிறார்கள் இதனால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
20 Nov 2025சென்னை: பார்சல்களை அனுப்ப தனி ரயில் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2025.
20 Nov 2025 -
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பப்பதிவு அறிவிப்பு திடீர் ‘வாபஸ்'
20 Nov 2025சென்னை: சிறப்பு ஆசிரியர் தகுதிதேர்வு விண்ணப்பப்பதிவு வாபஸ் ஆனது.
-
ரூ.823 கோடிமதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது அமெரிக்கா
20 Nov 2025நியூயார்க்: டாங்கி எதிர்ப்பு ஏவுகண, பீரங்கி குண்டுகள் இந்தியாவுக்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என்று அமெரிக்க அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன ஓவியம்
20 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஓவியம் ஏலம் போனது.
-
நியூயார்க் மேயரை இன்று சந்திக்கிறோர் ட்ரம்ப்
20 Nov 2025நியூயார்க்: நியூயார்க் மேயர் மம்தானியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார்.
-
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
20 Nov 2025ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
20 Nov 2025ராமநாதபுரம்: மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்துள்ளது.
-
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
20 Nov 2025டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார்.
-
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை: பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு
20 Nov 2025சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.
-
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயம்
20 Nov 2025சென்னை, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.
-
ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்
20 Nov 2025புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
20 Nov 2025திண்டுக்கல், திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதி
20 Nov 2025விருதுநகர்: ராஜபாளையம் அருக கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி: டாப் 10-ல் 8-வது இடத்திற்கு முன்னேறினார் நிதிஷ்குமார்
20 Nov 2025பாட்னா, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் டாப் 10-ல் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: முதல்வர்
20 Nov 2025சென்னை: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து
20 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.
-
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் சவுதி அரேபியா அறிவிப்பு
20 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
-
மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு
20 Nov 2025புதுடெல்லி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும விவசாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு அளித்துள்ளது.
-
பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு
20 Nov 2025ராய்ப்பூர், பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
20 Nov 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைய பொதுமக்கள் கையில் தான் உள்ளது என்று சரத்துகுமார் கூறினார்.
-
சென்னை-ஆந்திரா இடையே சிறப்பு ரயில்
20 Nov 2025சென்னை: சென்னை - ஆந்திரா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மக்களாட்சி மாண்பை மதிக்காதவர் கவர்னர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Nov 2025சென்னை, மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வளைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக அதிகரிக்க அன்புமணி கோரிக்கை
20 Nov 2025சென்னை, நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அன்பு மணி ராமதாஸ் கூறினார்.


