முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதி எண்ணிக்கையிலும் டிரம்ப் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      உலகம்
Trump 2023 03 05

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிபரை தேர்வு செய்யும் கடைசி போர்க்கள மாகாணத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 6 ஆம் தேதியில் அதிகாலையில் தொடங்கி, நேற்று வரையில் (நவ. 10) எண்ணப்பட்டு வந்தது. மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, வடக்கு கரோலினா, நவாடா, அரிஸோனா போன்ற போர்க்கள மாகாணங்கள்தாம் உண்மையில் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவையாக உள்ளன. இருப்பினும், பெரும்பான்மை பெறுவதற்கான 270 என்ற வாக்குகளைவிட கூடுதலான வாக்குகளைப் பெற்று, டொனால்ட் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிபரைத் தீர்மானிக்கும் போர்க்கள மாகாணங்களில் ஒன்றான மற்றும் கடைசி மாகாணம் அரிஸோனாவிலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 4 நாள்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், போர்க்கள மாகாணங்கள் ஒன்றில்கூட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறவில்லை என்று கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து