முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை: மக்கள் இயல்பு வாழக்கை, ரயில், விமான சேவைகள் பாதிப்பு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      தமிழகம்
Chennai-rains 2024-11-30

சென்னை, பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்ககும் கனமழையால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான 'பெஞ்சல்' புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே நேற்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடனும் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், வானிலை மையத்தின் சார்பில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்றும் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை அடுத்த ஆவடியில் மின்சார கம்பி மீது தென்னை மரம் விழுந்து மின்சார தடை ஏற்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் புயல் உள்ளது. 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  சென்னை பல்லாவரத்தில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் 2 மணி நேரம் வரை பல்லாவரத்திலேயே நிறுத்தப்பட்டு உள்ளன.  மழைநீரை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மரக்காணத்திற்கு அருகே பெஞ்சல் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே பெஞ்சல் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டது. பெஞ்சல் புயல் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து