எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நடிகர் வடிவேலுக்கு எதிராக எந்த அவதூறு கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன் என்று கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்துள்ளார்.
நடிகர் வடிவேலு, சிங்கமுத்து இடையே நிலப்பிரச்னை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் சூழலில், சிங்கமுத்து நடிகர் வடிவேலு ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அதில் தம்மை பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் சிங்கமுத்து பேசுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிங்கமுத்து தொடர்ந்து அவதூறாக பேசுவதாக வடிவேலு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அதற்கு சிங்கமுத்து தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட ஐகோர்ட், வடிவேலு குறித்து அவதூறாக பேசக்கூடாது, அதற்கான உத்தரவாத மனு தாக்கல் செய்யவேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள அவதூறு வீடியோக்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந் நிலையில், ஐகோர்ட் உத்தரவுப்படி, வடிவேலு குறித்து அவதூறு பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அடங்கிய மனு ஒன்று சிங்கமுத்து தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |