முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் சிறுமலையில் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      தமிழகம்
NIA 2023 04 25

Source: provided

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலையில் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் சிறுமலை அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. சிறுமலை மலைப்பாதையின் 17-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உடல் அழுகிய நிலையில் வாலிபரின் பிணம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், அந்த தோட்டத்துக்கு வந்து சோதனையிட்டனர். பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி சென்றனர்.

அப்போது பிணத்தின் அருகில் கிடந்த பேட்டரி, வெடிகுண்டு மற்றும் வெடிபொருட்களை போலீசார் எடுத்தனர். அப்போது திடீரென்று வெடிகுண்டுடன் இணைக்கப்பட்டிருந்த பேட்டரி வெடித்தது. இதில் போலீஸ்காரர்கள் மற்றும் வனப்பாதுகாவலர் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த போலீஸ்காரர்களும், வனப்பாதுகாவலரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருட்களை சோதனையிட்டனர். அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சாபு (வயது 35) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் சிறுமலை மலைப்பாதையில் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால், பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து