முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      இந்தியா
Dharmendra Pradhan 2023 06 21

Source: provided

புதுடில்லி : என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக நேற்று முன்தினம் லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிய தர்மேந்திர பிரதான், பேசியதை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தலைமைச்செயலர் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழக அரசு ஆர்வமாக இருக்கிறது எனக்கூறியிருந்தார்.

மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகே புதிய தேசிய கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டது. 1963 ல் கொண்டு வரப்பட்ட மும்மொழிக் கொள்கைக்கும், தற்போதைய மும்மொழிக் கொள்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உலகத்தின் தேவையை கருத்தில் கொண்டு தான் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. 5ம் வகுப்பு வரை அந்த மாநிலத்தின் மொழியில் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என கல்விக்கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன். தமிழ் மொழி அனைவருக்கும் பொதுவானது. பிரதமர் மோடி அரசு தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் விரோதமானது அல்ல. எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. தி.மு.க., எம்.பி.,க்களின் வலி எனக்கு புரிகிறது. என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்டு தயார். ஆந்திராவில் 10 மொழிகளை கற்பிக்கத் தயார் என சந்திரபாபு கூறியுள்ளார். எங்களுக்கு இரு மொழியே போதும் எனக்கூறுபவர்களின் அரசுப் பள்ளிகளில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து