முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போட வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025      தமிழகம்
Modi-2 2025-04-06

Source: provided

ராமேஸ்வரம் : எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போடுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைந்துள்ளது. 21ம் நூற்றாண்டில் தமிழகத்தின் பாரம்பரியத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

மீனவர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும். மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுகள்.

100 ஆண்டுக்கு முன்பு பாம்பன் பாலத்தை கட்டியது ஒரு குஜராத்தி. இன்று புதிய பாம்பன் பாலத்தை திறந்த நானும் குஜராத்தி. தேசத்தின் அனைத்து இடத்திலும் பாஜக தொண்டர்கள் மக்களுக்கு சேவை ஆற்றுவதை பார்த்து பெருமைப்படுகிறேன். சேவையாற்றும் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். நன்றி, வணக்கும், மீண்டும் சந்திக்கிறேன் என தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து