முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்சய திருதியை நாளில் மட்டும் ரூ.12 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனை

வியாழக்கிழமை, 1 மே 2025      இந்தியா
Gold 2022-12-31

மும்பை, அட்சய திருதியையொட்டி, ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்திந்திய நகை கடை உரிமையாளா்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

 இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையாகி வரும்போதிலும், ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.16,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு  தகவல்படி, அட்சய திருதியை நாளில் சுமார் ரூ12,000 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்கப் பொருள்கள் விற்பனையாகியுள்ளன.

கடுமையான விலையேற்றம் காரணமாக, தங்கம் வாங்குவதில் மாற்றம் ஏற்படுமோ என்று தங்க நகைக் கடை வணிகர்கள் சந்தேகத்தில் இருந்தனர். ஆனால், தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அவர்களை ஏமாற்றவில்லை. வழக்கம் போல நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியதாகவும், வழக்கமான அளவில் விற்பனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அட்சய திருதியை மீதான நம்பிக்கை மற்றும் மூகூர்த்த காலங்கள் நெருங்குவதால், தங்க நகையின் மவுசு குறையவில்லை என்றும் கூறியுள்ளனர். விலை உயர்ந்து காணப்பட்டாலும் தேவையும் அதிகமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு 10 கிராம் தங்கம் ரூ.72,300 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு விலையில் 38 சதவீதம் உயர்ந்து ரூ.99.500 முதல் ரூ.99,900 வரை விற்பனையானாலும் மக்கள் வாங்குவது குறையவில்லை. விலையேற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவே செய்துள்ளனர்.

சென்னையில் 5000 உள்பட தமிழகம் முழுவதும் 50,000 சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அட்சய திருதியையொட்டி புதன்கிழமை காலை 6 மணி முதல் ஏராளமானோா் வந்து நகைகளை வாங்கிச் சென்றனா். நாட்டிலேயே இந்த ஒரு நாளில் மட்டும் ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனையானதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து