முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவிடை மருதூர் பாலியல் கொடுமையை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க. ஆர்ப்பா்டடம்: உதயகுமார் தலைமையில் 23 ம்தேதி நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
ADMK

சென்னை, திருவிடை மருதூரில் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாளை மறு நாள் தஞ்சாவூரில் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் தி.மு.க. மாடல் அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல்,தமிழ் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மேலும், ஸ்டாலின்மாடல் அரசின் காவல்துறை ஏவல் துறையாக மாறி,தி.மு.க. நிர்வாகிகள் செய்யும் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் கூடபாரபட்சம் காட்டுகின்றன.கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் தனியார் கடை ஒன்றில்வேலை செய்து வந்து 34 வயதுடைய பெண் ஒருவர்,பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில், சண்முக பிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன் மற்றும் சரவணன் ஆகிய நான்குபேரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து அந்த நான்கு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.எனினும் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் தனது குடும்பத்தினருடன்,தான் பாதிக்கப்பட்டதை காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து சிறுமி முதல் முதியோர் வரைபாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது. பல பாலியல் தொல்லை சம்பவங்களில், முதல் தகவல் அறிக்கையேபதிவு செய்யப்படுவதில்லை. குறிப்பாக,தி.மு.க. நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச் சம்பவங்களில், பேச்சுவார்த்தை மூலம் சரிகட்டும் வகையில் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலின் அரசின் இத்தகைய சர்வாதிகாரப் போக்கிற்கு எனதுகண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.2026-ல் அ.தி.மு.க.. அரசு பதவியேற்றவுடன், அண்ணா பல்கலைக்கழக நிகழ்வில், யார் அந்த சார் – குற்றத்தில் சம்பந்தப்பட்ட பிற ‘சார்’கள் விவரம் கண்டிப்பாக வெளிக்கொண்டுவரப்பட்டு, உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும்.அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, மீண்டும் முழுமையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின்பெற்றோருக்கு நீதி வழங்கப்படும்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் பாலியல்வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திடவும்; பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திடவும்; தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் திராணியற்று வேடிக்கைபார்த்து வரும் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க.. தஞ்சாவூர் மாநகரத்தின் சார்பில், 23 ம்தேதி காலை 9.30 மணியளவில்,தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜெயலலிதா பேரவைச் செயலாளரும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள்அமைச்சருமான ஆர்.பி. . உதயகுமார், தலைமையிலும்; அ.தி.மு.க.. அமைப்புச் செயலாளர்களான சு. காந்தி,  துரை. செந்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் செயலாளர் பாரதிமோகன், தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் செயலாளர் ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்டசெயலாளர் . ஆ. சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர். சேகர்தஞ்சாவூர் மாநகர செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து