முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்சி நம்பராக 12-ஐ தேர்வு செய்தது ஏன்? - சி.எஸ்.கே. வீரர் பிரெவிஸ் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      விளையாட்டு
CSK 2024-04-15

Source: provided

சென்னை : சி.எஸ்.கே. அணியில் 12-ம் எண் ஜெர்சியை தேர்வு செய்தது ஏன் என பிரெவிஸ் விளக்கமளித்துள்ளார்.

ஆறுதல் வெற்றிக்காக...

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டின.

நம்பிக்கை நட்சத்திரம்...

முன்னதாக நடப்பு சீசனில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரெவிஸ் மாற்று வீரராக சென்னை நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது. அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரெவிஸ் சென்னை அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.

12-ம் நம்பர் ஜெர்சி...

சென்னை அணியில் பிரெவிஸ் 12-ம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார். ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய போதும் சரி, ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் தரப்பில் விளையாடிய போதிலும் சரி அவர் 17-ம் நம்பர் கொண்ட ஜெர்சி அணிவது வழக்கம். ஆனால் அவர் ஏன் தற்போது 12-ம் நம்பர் பொறித்த ஜெர்சியை அணிந்து விளையாடுகிறார்? என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியது.

ஏப்ரல் 12ம் தேதி...

இதற்கான காரணம் குறித்து பிரெவிஸ் பேசிய வீடியோவை சி.எஸ்.கே. நிர்வாகம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில் பேசியுள்ள பிரெவிஸ், "ஏப்ரல் 12ம் தேதிதான், என்னை அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக சி.எஸ்.கே.விடம் இருந்து அழைப்பு வந்தது. அதனால்தான், எனது ஜெர்சி நம்பரை '12' ஆக வைத்துள்ளேன்." என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து