Idhayam Matrimony

தமிழகத்தில் ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு உறுதி தொடக்கக் கல்வி இயக்ககம் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை: தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் கோடை விடுமுறை விடுக்கப்பட்டது. ஜூன் 1 ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெய்யிலை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், வெய்யிலின் தாக்கம் குறைந்திருப்பதால் திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். தற்போது தொடக்கக் கல்வி இயக்ககம் அதனை உறுதி செய்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 2-ம் தேதி பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து