முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிக்கட்டத்தில் ஐ.பி.எல் 2025: குவாலிபையர் முதல் சுற்றில் இன்று பஞ்சாப், ஆர்.சி.பி. அணிகள் மோதல்

புதன்கிழமை, 28 மே 2025      விளையாட்டு
RCB-2025-05-28

புதுடெல்லி, ஐபிஎல் 2025: குவாலிபையர் 1 சுற்றுக்கான இன்று நடைபெறும் முதல் போட்டியில்  பஞ்சாப், ஆர்.சி.பி. அணிகள் மோதுகிறது. 

தகுதி பெற்ற அணிகள்...

நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

வெளியேறிய அணிகள்...

சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

முதலிடத்தில்  பஞ்சாப்

இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில்  இன்று மோதுகிறது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் குஜராத், மும்பை அணிகள் மோதவுள்ளன.

பைனலுக்கு தகுதி ...

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும்.  இதில் தோற்கும் அணியும் மும்பை குஜராத் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன்  மோதும். அதில் வெற்றி பெறும் பைனலுக்கு தகுதி பெறும் 

 

இந்த குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது. குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து