முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் தொடர் கனமழை: போர்க்கால அடிப்படையில் நிவாரண பணி-முதல்வர் சித்தராமையா உத்தரவு

வியாழக்கிழமை, 29 மே 2025      இந்தியா
Siddaramaiah 2023 04 16

Source: provided

பெங்களூரு: கர்நாடகாவில்  போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை  மேற்கொள்ள முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடந்த 24-ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுந்தது உள்ளிட்ட பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வீடு இடிந்து விழுந்து, மரம் சாய்ந்து விழுந்து இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

உடுப்பி, உத்தரகன்னடாவிலும் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.  குடகு மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- "கர்நாடகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு மந்திரிகள், செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் 170 தாலுகாக்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க 30, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். வெள்ளம் ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க ஏதுவாக 2 ஆயிரத்து 296 நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்குகளில் போதுமான அளவுக்கு நிதி உள்ளது."  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து