முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் அன்புமணி தலைமையில் இன்று கட்சி கூட்டம்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி : எம்.எல்.ஏ. அருளும் சிகிச்சைக்காக அனுமதி

புதன்கிழமை, 18 ஜூன் 2025      தமிழகம்
GK-Mani-2025-05-31

Source: provided

சென்னை : அன்புமணி தலைமையில் சேலத்தில் இன்று கட்சிக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், பா.ம.க., முக்கிய தலைவர்கள் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. அருள் நெஞ்சு வலி காரணமாக அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், இனி உயிர் இருக்கும் வரை பா.ம.க.,வின் தலைவர் பொறுப்பை தானே வகித்துக் கொள்வேன் என்று தீர்க்கமாக கூறி விட்டார். இதையடுத்து, பா.ம.க.,வில் இரு கோஷ்டிகள் உருவெடுத்துள்ளது. இதில், அன்புமணி பக்கமே அதிக நிர்வாகிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ராமதாஸூக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், அன்புமணி தலைமையில் இன்று சேலத்தில் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அன்புமணியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தற்போது, பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே., மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மற்றும் தருமபுரி மாவட்ட கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, அன்புமணி இன்று சேலம் செல்ல உள்ள நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து