முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? - தமிழ்நாடு அரசு விளக்கம்

புதன்கிழமை, 18 ஜூன் 2025      தமிழகம்
virus

Source: provided

சென்னை : கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. தற்போது நிலவரப்படி 222 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அறிவிப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:- இது பழைய வீடியோ. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாக பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து