முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவியல் சிந்தனையே ஏ.ஐ. உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி: விஜய் பேச்சு

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      தமிழகம்
vijay 2025-01-06

Source: provided

சென்னை : தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சிந்தனையோடு இருங்கள், அதுதான் ஏ.ஐ. உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி" என்று விஜய் கூறினார்.

தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில்  அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் நேற்று சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் என 2000-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இந்த விருது வழங்கும் விழாவின் தொடக்கத்தில் விஜய் பேசியதாவது: மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீட் மட்டும் தான் உலகமா? அதைதாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதுவரைக்கும் ஊழலே செய்யாதவர்களை தேர்வு செய்யுங்கள் முறையான ஜனநாயகம் இருந்தால்தான் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும்.படிப்பு முக்கியம்தான் ஆனால் மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். வரும் தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தோடு வருவார்கள்.

மக்களிடம் கொள்ளையடித்த பணம் தான் அது. ஜனநாயக கடமை முக்கியம்: காசுக்காக ஓட்டுப்போடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும். அடுத்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும்.மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை கூடாது.பெரியாருக்கே சாதி சாயம் பூசும்படி கேள்வி கேட்கிறார்கள்.பெரியாருக்கு சாதி சாயம் பூச முற்படுவது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு நடத்திய யு.பி.எஸ்.சி. தேர்வில் சாதிய சாயம் பூசுவது போல கேள்வி இடம் பெற்றது கண்டித்தக்கது.

போதைப்பொருளை போல சாதியையும் மதத்தையும் ஒதுக்கி வையுங்கள். சாதி, மத பிரிவினைவாத சிந்தனைகள் பக்கம் செல்லாதீர்கள். தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சிந்தனையோடு இருங்கள், அதுதான் ஏ.ஐ. உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி" இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து