முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு

சனிக்கிழமை, 31 மே 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் நேற்று ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் நேற்றுடன் ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெற்றனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58ல் இருந்து 60 ஆக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள், தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள்.

குறிப்பாக மே மாத்தில் தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள். அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும் போது மே மாதத்தில் தான் ஓய்வு பெறுவார்கள். அதனடிப்படையில் நேற்றுடன் (31ம் தேதி) ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர். அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள். கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவிலும் ஊழியர்களாக இருப்பார்கள்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் அதிகம் பேர் ஓய்வு பெறுவது இந்த மாதத்தில் தான். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதமாகும். இதில் சில ஊழியர்கள் தாமாக முன்வந்து முன்கூட்டிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து